கிளிநொச்சியில் அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பது குறித்து செயலமர்வு! (படங்கள் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்டத்திற்கான துறை சார்ந்த துரித அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பது தொடர்பான செயலமர்வு நேற்று(19.09) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்துக்கான ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிவகைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறு வட மாகாணத்தின் மாவட்டங்களில் உருவாக்கப்படும் கருத்திட்டங்களை கொண்டு வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்படும்.
இச் செயலமர்வில் வடமாகாண பிதிப் பிரதம செயலாளர்,திட்டமிடல், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் அரச திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவன அங்கத்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.