திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பிரித்தானியாவில் போராட்டம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பிரித்தானியாவில் போராட்டம்!

தியாகத் தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ் நல்லூரில் இன்று (26.09) கொட்டும் மழைக்கு இடையில் நடைபெற்றது. 

இந்நிலையில்,  திலீபனின் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகரிலும் அரசியல் விழிப்புணர்வுப் போராட்டம் காலை 11 மணியளவில் ஆரம்பமாகி நடை பெற்று வருகின்றது. 

தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபத்திற்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.  தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. 

இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைய இருக்கும் இவ்வணக்க நிகழ்வில் ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டனர்.  அத்துடன்  மாலை 4 மணிக்கு எழுச்சி உரைகளும் உறுதியேற்பும் இடம் பெறவுள்ளன. 

images/content-image/1695735321.jpg

images/content-image/1695735339.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4