கனடாவின் லொத்தர் சீட்டிழுப்பொன்றில் 68மில்லியன் டொலர் பரிசு வெல்லப்பட்டுள்ளது

#Canada #Lanka4 #பரிசு #லொத்தர் #Lottery #வெற்றி #win #Canada Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
8 months ago
கனடாவின் லொத்தர் சீட்டிழுப்பொன்றில் 68மில்லியன் டொலர் பரிசு வெல்லப்பட்டுள்ளது

கனடாவின் டொரன்டூவில் லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றின் மூலம் 68 மில்லியன் டாலர்கள் பரிசாக வென்றெடுக்கப்பட்டுள்ளது.

 லொட்டோ 64/49 கோல்ட் போல் ஜக்போர்ட் பரிசு சீட்டிலுப்பில் இந்த பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக ஜாக்பாட் பரிசுத்தொகை 68 மில்லியன் டாலர்களாக பதிவாகி இருந்தது.

 ஒன்றாரி லொட்டரி மற்றும் கேமிங் கோப்ரேசன் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீட்டிலுப்பில் பரிசை வென்ற தனிநபர் அல்லது குழு தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறெனினும் இந்த பரிசு தொகைக்குரிய லொத்தர் சீட்டு டொரன்டோவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சீட்டிலுப்பில் மேலும் நான்கு ஒரு லட்சம் பணப்பரிசில்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன.