IND vs AFG WC2023; இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!
#India
#India Cricket
#Cricket
#sports
#2023
#Tamilnews
#ImportantNews
#Sports News
Mani
1 year ago

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 273 ரன்களை ஆப்கான் கிரிக்கெட் அணி நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
ஆப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகப்பெரிய அளவில் ரன்குவிக்க முடியவில்லை என்றாலும், நிலைத்து நின்று வலுவான அடித்தளம் அமைத்தனர்.
அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை மளமளவெனஉயர்த்தினர்.
மேலும், இருவரும் அரைசதம் கடந்து முறையே ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர்.



