ENG vs AFG; இங்கிலாந்துக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!
உலகக் கோப்பையில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ரஹீம் ஸத்ரன் களமிறங்கினர். இந்த இணை ஆப்கானிஸ்தானுக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. இப்ரஹீம் ஸத்ரன் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ரஹ்மத் ஷா ( 3 ரன்கள்), ஹஸ்மதுல்லா ஷகிதி (14 ரன்கள்), அஸ்மதுல்லா ஓமர்சாய் (19 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இக்ரம் அலிக்கில் 66 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் முஜீப் மற்றும் ரஷித் கான் சிறிது அதிரடி காட்டினர். இறுதியில் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் ஆட்டமிழந்தது.இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டாப்ளே, லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டாப்ளே, லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.