ரிலீஸுக்கு தயாரான லியோ; லோகேஷ் பகிர்ந்த புகைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் அதில், 'லியோ' படத்திற்கு முன்பு லோகேஷும் அனிருத்தும் கைகோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து 'லாக்ட் அண்ட் லோடட்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



