AUS vs SL; ஆஸ்திரேலியாவுக்கு 210 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் அதிக மதிப்பெண்கள் பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பதும் நிசாங்க மற்றும் குசல் பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்கள் இருவரும் முறையே 61 ரன்கள் மற்றும் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினர்.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்த நிலையில் 43.3 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய உள்ளது.