37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இன்று தொடக்கம்

#India #sports #2023 #Import #Player #Sports News #national
Mani
2 years ago
37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இன்று தொடக்கம்

கோவாவில் நடைபெறவுள்ள 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 9-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. அங்கு 5 இடங்களில் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, கைப்பந்து, மல்யுத்தம், யோகாசனம் உள்பட 43 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தமிழகம் 446 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.

படோர்டாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கண்கவர் தொடக்க விழாவில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டிகள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினாலும், சில விளையாட்டுகள் ஆரம்பித்து நடந்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4