பிரான்ஸில் வீசிய சியாரா புயல் காரணமாக ஒருவர் பலி ; நால்வர் காயம்
#France
#Rain
#Lanka4
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

சியாரா புயல் காரணமாக ஒருவர் பலியானதாகவும், நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை தளர்த்தப்பட்டு, செம்மஞ்சள் எச்சரிக்கை மட்டும் தொடர்கிறது.
இந்த புயலில் Aisne நகரைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். மரம் முறிந்து விழுந்து அவர் படுகாயமடைந்து பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக தற்போது 1.2 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் Brittany இல் மாத்திரம் 780,000 வீடுகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புயல் காரணமாக நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவற்றில் மூவர் தீயணைப்பு படை வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



