அமெரிக்காவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புகள்!
அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது கடந்த டிசம்பர் மாதத்தில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவும், அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் புதிய வேலைவாய்ப்பு பிரச்சினைகள் முதன்மையான பிரச்சினைகளாக பரிசீலிக்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கு தீர்வை வழங்கும் வகையில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, கடந்த 2023 டிசம்பர் மாதம் 2 இலட்சத்து 16 ஆயிரம் வேலை வாய்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர் துறையின் கூற்றுப்படி, ஊதியத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 2023 நவம்பரில் இருந்து 0.4 சதவீத அதிகரிப்புடன் நிலையான உயர்வைக் கண்டது. ஆண்டுக்கு ஆண்டு, சராசரி மணிநேர வருவாய் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.