பிரான்ஸ் குவிக்கும் அதி நவீன பீரங்கிகள். அடுத்த கட்டத்துக்கு நகர்வு.

#France #Weapons #technology #purchase
பிரான்ஸ் குவிக்கும் அதி நவீன பீரங்கிகள். அடுத்த கட்டத்துக்கு நகர்வு.

நவீன வசதிகளுடன் கூடிய நவீன பீரங்கிகளை பிரெஞ்சு அரசாங்கம் வாங்க உள்ளது. 155 மில்லி மீற்றர் அகலம் கொண்ட குண்டுகளை கொண்டு தாக்கக்கூடிய canons Caesar பீரங்கிகளையே அரசு வாங்க உள்ளது.

 மொத்தமாக 350 மில்லியன் யூரோக்கள் செலவில், 109 புதிய தலைமுறை சீசர் பீரங்கிகளை Nexter எனும் நிறுவனத்திடம் இருந்து அரசு வாங்க உள்ளது. இந்த நிறுவனமானது பிரான்ஸ்-ஜேர்மன் இணை நிறுவனமாகும்.

images/content-image/1706866413.jpg

 ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் குறித்த 155 மில்லிமீற்ற அகலமான ’ஆறு’ குண்டுகளை 40 கிலோ மீற்றர் தூரத்துக்கு இலக்கு வைத்து தாக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரெஞ்சு இராணுவத்தினரிடம் இருந்த 76 சீசர் பீரங்கிகளை உக்ரேனுக்கு பிரான்ஸ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!