ஐரோப்பாவில் நிலவும் பரசிட்டமோல் வலிநவாரணி மருந்துக்கான தட்டுபாடு இனி நீங்கும். பிரான்ஸில் புதிய நிறுவனம்.
#France
#Pain
#Medicine
#France Tamil News
#Relief
Mugunthan Mugunthan
1 year ago

காய்ச்சல், தடிமன், மற்றும் நோக்களுக்கு பாவிக்கப்படும் பரசிட்டமோல் மாத்திரைகள் அண்மைக்காலங்களில் ஐரோப்பாவில் பெரும் தட்டுப்பாடாகவிருந்தது. தற்போது இதற்குத் தீர்வாக பிரான்ஸில் 2025ம் ஆண்டில் புதிய பரசிட்டமோல் மாத்திரை தயாரிப்பு நிறுவனமொன்று உருவாகவுள்ளது.
இது ஆண்டொன்றுக்கு 4.000 தொன் மாத்திரைகளை தயாரித்து சந்தைப்படுத்த உள்ளதாகவும், இதற்காக 28 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ஒரு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பரசிட்டமோல் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றிய சுகாதார அமைப்பால் வருமான பற்றாக்குறையால் மூடப்பட்டது. அதன் பின்னர் வேறு நாடுகளிலிருந்தே குறித்த மாத்திரை ஐரோப்பிய நாடுகளிற்கு இறக்குமதி செய்யப்பட்டது.



