மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : முன்னதாகவே ரஸ்யாவை எச்சரித்த அமெரிக்கா!
மொஸ்கோவில் தீவிரவாத தாக்குல் நடத்தப்படுவற்கான வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், தாக்குதல்தாரிகள் மிகப் பெரிய கூட்டங்களை குறிவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பொது ஆலோசனையை வழங்க வெளியுறவுத்துறையை தூண்டியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அரசாங்கம் தனது நீண்டகால ‘எச்சரிக்கை கடமை’ கொள்கையின்படி ரஷ்ய அதிகாரிகளுடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹால் கச்சேரி அரங்கிற்குள் நுழைந்த ஒரு குழு தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொருப்பேற்றது.
இதேவேளை இந்த மாத தொடக்கத்தில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்களை கூட்ட நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.