மாஸ்கோ தாக்குதல் கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி
மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புதினும், மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் முறைகள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். எப்போதும் மற்றவர்களை குறை கூறுவார்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர்.
அவர்கள் மக்களை சித்ரவதை செய்து கற்பழிக்கிறார்கள்-பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எங்களுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ரஷிய குடிமக்களை பற்றி பேசுவதற்குப் பதிலாக, இத்தாக்குதலை உக்ரைனுடன் எவ்வாறு இணைப்பது என்று யோசித்து புதின் ஒரு நாள் அமைதியாக இருந்தார்.
உக்ரேனிய மண்ணில் தற்போது கொல்லப்படும் நூறாயிரக்கணக்கான ரஷ்யர்கள், அவர்கள் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக பயங்கரவாதிகளை தடுத்திருக்க முடியும்.
புதின் தனிப்பட்ட அதிகாரத்திற்காக இந்த சூழ்நிலைகளில் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பார். தீவிரவாதிகள் எப்போதும் தோற்க வேண்டும் என்றார்.