ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் திட்டம் ஒத்திவைப்பு

#America #Prison #government #England #extradite
Prasu
8 months ago
ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் திட்டம் ஒத்திவைப்பு

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே (வயது 56).

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கியது.

அதன்பின்னர், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதனால் பல ஆண்டுகளாக அசாஞ்சே நடத்திய சட்டப்போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது.

எனினும், அசாஞ்சேவை நாடு கடத்துவதை நிறுத்தி வைப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியை அவரது வழக்கறிஞர்கள் தொடங்கினர். 

மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு, கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தனர். அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதே அவரது வழக்கறிஞர்களின் வாதமாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!