திருமண சமத்துவ மசோதாவுக்கு தாய்லாந்து நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்துள்ளது!
தாய்லாந்தின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் உள்ள சட்டமியற்றுபவர்கள் இன்று (27.03) திருமணச் சமத்துவ மசோதாவுக்கு பெரும்பான்மையாக ஒப்புதல் அளித்துள்ளனர்,
பிரதிநிதிகள் சபையின் 415 உறுப்பினர்களில் 400 பேரின் ஒப்புதலுடன் மசோதா அதன் இறுதி வாசிப்பை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிராக 10 பேர் வாக்களித்துள்ளனர்.
"ஆண்கள் மற்றும் பெண்கள்" மற்றும் "கணவன் மற்றும் மனைவி" என்ற வார்த்தைகளை "தனிநபர்கள்" மற்றும் "திருமண பங்காளிகள்" என்று மாற்றுவதற்கு இந்த மசோதா ஒப்புதல் அளிக்கிறது.
இது LGBTQ+ ஜோடிகளுக்கு முழு சட்ட, நிதி மற்றும் மருத்துவ உரிமைகளுக்கான அணுகலைத் திறக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மசோதா தற்போது செனட்டிற்கு செல்கிறது, இது கீழ் சபையை நிறைவேற்றும் எந்தவொரு சட்டத்தையும் அரிதாகவே நிராகரிக்கிறது, பின்னர் அரச ஒப்புதலுக்காக மன்னரிடம் சமர்ப்பிக்கப்படும்.