மேற்குலக நாடுகளை எச்சரித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

#Weapons #Russia #Country #Warning #Putin #President
Prasu
4 weeks ago
மேற்குலக நாடுகளை எச்சரித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

”ரஷ்யா எந்தவொரு நேட்டோ நாட்டையும் தாக்குவதற்கு முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை.

போலந்து, பால்டிக் நாடுகள் அல்லது செக் குடியரசை ரஷ்யா தாக்காது. ஆனால், மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்கினால் அவை ரஷ்யப் படைகளால் சுட்டு வீழ்த்தப்படும்.” என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது 1962ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு உருவான பாரிய நெருக்கடியாகும்.

 இந்த நிலையில், ரஷ்ய விமானப்படை விமானிகளிடம் பேசிய புடின், 1991 சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணி கிழக்கு நோக்கியும் ரஷ்யாவை நோக்கியும் விரிவடைந்துள்ளது. ஆனால் நேட்டோ படையை தாக்கும் திட்டம் மொஸ்கோவிடம் இல்லை.” எனக் கூறினார்.