காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : பிரித்தானிய பிரஜைகள் மூவர் உயிரிழப்பு!
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பிரிட்டிஷ் உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் (WCK) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாட்டினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு உணவு வழங்கும் அரசு சாரா அமைப்பான WCK மூலம் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு உணவு விநியோகம் செய்யும் பணியாளர்களின் கார் அப்பகுதியூடாக பயணித்தபோது வான்வழித் தாக்குதலில் சிக்குண்டது.
இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேலியப் படைகளே காரணம் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
காசா பகுதியில் அப்பாவி மக்கள் மீது நமது படைகள் எதிர்பாராதவிதமாகத் தாக்குதல் நடத்தியது சோகமான சம்பவம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.