ஈக்வடாருடன் தூதரக உறவை துண்டித்த பிரபல நாடு
ஈக்வடார் உடனான இராஜதந்திர உறவுகளை மெக்சிகோ முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அரசியல் தஞ்சம் கோரிய முன்னாள் ஈக்வடார் துணை ஜனாதிபதியை கைது செய்வதற்காக குய்டோவில் உள்ள மெக்சிகோ தூதரகத்திற்குள் போலீசார் நுழைந்ததை அடுத்து, மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் இந்த தகவல்களை அறிவித்துள்ளார்.
ஈக்வடார் பொலிசார் மெக்சிகோ தூதரகத்திற்குள் நுழைந்து டிசம்பரில் இருந்து அங்கு வசிக்கும் ஜார்ஜ் கிளாஸை கைது செய்ய கட்டாயப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர விரிசல் ஆழமடைந்தது. கிளாஸ், நாட்டிலேயே மிகவும் தேடப்படும் நபர், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்.
ஈக்வடார் அதிகாரிகள் இன்னும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.