உக்ரைன் - ரஷ்ய போர் : அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுத்துள்ள சுவிட்சர்லாந்து!
சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்ட உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கேலி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ்கோ அதன் நலன்களைப் புறக்கணிக்கும் எந்தவொரு செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் ஏற்காது என்றும் அவர் எச்சரித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான சண்டைக்குப் பிறகு உக்ரைனில் அமைதிக்கான பாதையை வகுக்க ஜூன் மாதம் ஒரு உயர்மட்ட சர்வதேச மாநாட்டை நடத்தப்போவதாக சுவிட்சர்லாந்தின் அரசாங்கம் கூறியது.
இந்நிலையிலேயே புட்டினின் அறிவிப்பு வந்துள்ளது. ஜூன் மாத பேச்சுவார்த்தையில் சேர ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் புட்டின் கூறியுள்ளார்.
மாஸ்கோ தனது துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும், உக்ரைனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் அதன் நடவடிக்கைக்காக சர்வதேச நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சமாதான சூத்திரத்தை ரஷ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.