அறுந்து விழுந்த கேபிள் கார் - 174 பேர் பாதுகாப்பாக மீட்பு

#Accident #people #Turkey #Rescue
Prasu
7 months ago
அறுந்து விழுந்த கேபிள் கார் - 174 பேர் பாதுகாப்பாக மீட்பு

துருக்கியின் அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள் கார் வசதி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கேபிள் கார்களில் செல்வார்கள். 

2,010-அடி உயர மலை உச்சியில் உள்ள உணவகம் மற்றும் சுற்றுலா தலத்திற்கு கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று கேபிள் கார் ஒன்று அறுந்து விழுந்து பாறை மீது மோதியதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் கேபிள் கார்களை இயக்க முடியவில்லை. 

இதனால் மலைக்கு மேல்கேபிள் கார்களில் 174 பேர் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இதில் மீட்புக்குழுவினர் 600 பேர் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இரவு முழுவதும் மீட்புப்பணி நடந்தது. சுமார் 23 மணி நேரத்துக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!