ஜோர்ஜியாவின் சட்டமன்றத்தில் சலசலப்பு : பாராளுமன்றத்திற்கு வெளியே ஒன்றுக்கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள்!
ஜோர்ஜியாவின் சட்டமன்றத்தில் வெளிநாட்டு முகவர் மசோதா என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினையூட்டும் புதிய சட்டத்தை விவாதித்தபோது சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவின் தலைநகரான திபிலிசியில் பாராளுமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆளும் ஜோர்ஜியன் ட்ரீம் கட்சியால் முன்மொழியப்பட்ட குறித்த சட்டமூலமானது, வணிக சாராத நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து 20% க்கும் அதிகமான நிதியைப் பெற்றால், அவை வெளிநாட்டு செல்வாக்கின் கீழ் இருப்பதாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
ரஷ்யாவிலும் இவ்வகையான சட்டமூலம் காணப்படுவதால், ஆர்ப்பாட்டகாரர்கள் ரஷ்ய சட்டம் என விமர்சித்துள்ளனர்.
அத்துடன்இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், சட்டத்தை இயற்றுவது ஜோர்ஜியாவின் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் நோக்கத்தைத் தடுக்கும் என்று கூறுகின்றனர்,