பாகிஸ்தானில் நிலவும் கல்வி நெருக்கடி - மலாலா யூசுப்சாய் கவலை
பாகிஸ்தானில் நிலவும் கல்வி நெருக்கடி குறித்து அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் கவலை தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போது 26 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக்கு வெளியே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானின் ஏழ்மையான மாவட்டங்களைச் சேர்ந்த சிறுமிகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் சுமார் 200,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றிடங்களின் பின்னணி, பாடசாலைகளின் செயல்திறன் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களைத் தக்கவைத்தல் மற்றும் பாடசாலை கல்வியின் தரம் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்கள் பதவிக்காலத்தில் இந்த எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க நடவடிக்கை எடுப்பதே பாகிஸ்தானின் கூட்டு நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் மலாலா கூறினார்.
அதற்கான யதார்த்தமான திட்டத்தை திட்டமிடுவது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.