உக்ரைனுக்கு உதவ ஜி20 நாடுகளை வலியுறுத்தும் ஐரோப்பிய யூனியன்

#Weapons #Country #Ukraine #War #European union
Prasu
7 months ago
உக்ரைனுக்கு உதவ ஜி20 நாடுகளை வலியுறுத்தும்  ஐரோப்பிய யூனியன்

உக்ரைன் மீது ரஷியா மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது உக்ரைனில் உள்ள கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீதான தாக்குதலை உக்ரைனால் எதிர்கொள்ள முடியாமல் போனது.

8 மாடி கட்டடம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இத்தாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது உக்ரைன்- ரஷியா போர், இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் ஈரான் தாக்குதல் ஆகியவை குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் ஜி7 நாடுகளில் வெறியுறவுத்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது "உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும். 

ரஷியாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க பேட்ரியாட் ஏர் பாதுகாப்பு ஏவுகனை சிஸ்டம்ஸ் இல்லை என்றால், உக்ரைனில் உள்ள மின்சார் சிஸ்டங்கள் அழிக்கப்படும். எந்தவொரு நாடும் வீடுகளில், தொழிற்சாலைகளில், போரின் முன்னணி களத்தில் மின்சாரம் இல்லாமல் சண்டையிட முடியாது" என்றார்.

 இந்த பேச்சுவார்த்தையின் போது இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனியோ டஜானி "உக்ரைன் தோல்வியடைந்தால் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் புதின் அமரமாட்டார்" என்றார். மேலும், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைக்கு அழைப்பு விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!