காஷ்மீரில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி குழு என்ற அமைப்பு தொடங்கியது. வர்த்தகர்களும் போராட்டத்தை குதித்தனர். மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரம் தேவை என கோஷம் எழுப்பினர். இதில் முஷாபராபாத் உள்பட சில மாவட்டங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.
பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினரை மக்கள் தாக்கினார்கள்.
இதில் சில போலீஸ்காரர்களை பள்ளத்தில் தள்ளி விட்டனர். இந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 90 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசாரும்,துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் கண்ணீர் குண்டுகளை வீசினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரம் அடைந்துள்ளது.