40000 குழந்தைகளின் கல்வியை பாதித்த ஆப்கானிஸ்தான் வெள்ளம்

#Death #Afghanistan #children #Flood #education
Prasu
6 months ago
40000 குழந்தைகளின் கல்வியை பாதித்த ஆப்கானிஸ்தான் வெள்ளம்

காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 

இதனால் கனமழை, நிலநடுக்கம், வறட்சி என மாறிமாறி பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுள் ஒன்று ஆப்கானிஸ்தான்.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். 

இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதனால் அவர்களது கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!