இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி

#China #government #Russia #Putin #President #Visit
Prasu
6 months ago
இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று சீனாவுக்கு சென்றார். சீன அதிபர் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அவர் இன்று சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

புதின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் புதினின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

சீன பயணத்துக்கு முன்பு புதின், சீன ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, நாங்கள் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். இந்த மோதலுக்கு அமைதியான வழிகளில் விரிவான, நிலையான மற்றும் நியாயமான தீர்வை நாங்கள் விரும்புகிறோம். 

ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளின் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!