நியூ கலிடோனியாவில் அவசர நிலை பிரகடனம்

#France #island #Governor #StateOfEmergency
Prasu
6 months ago
நியூ கலிடோனியாவில் அவசர நிலை பிரகடனம்

பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நியூ கலிடோனியா. பிரான்சில் இருந்து 17,000 கி.மீ. தூரத்தில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இப்பகுதி மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இங்கு நியூ கலிடோனியாவின் பழங்குடியினரான கனாக் இன மக்கள், ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் சந்ததியினரும் அதிகம் வசிக்கின்றனர். கடந்த 1853-ம் ஆண்டு இந்த பகுதி பிரான்சுடன் இணைக்கப்பட்டது. 

ஆனாலும், பல நூற்றாண்டுகளாக இப்பகுதியின் பூர்வ குடிகளான கனக் பழங்குடியின மக்களுக்கும், பிரஞ்சு மக்களுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில், பிரான்சில் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. நியூ கலிடோனியாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் பிரெஞ்சு குடியிருப்பாளர்களை மாகாணத் தேர்தலில் வாக்களிக்க இந்த சட்டம் அனுமதிக்கிறது.

 இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், நியூ கலிடோனியா முழுவதும் போராட்டம் வெடித்தது. 

இந்த சட்டத்தால் கனக் பழங்குடியின மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று கூறி, கனக் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. வன்முறையைத் தொடர்ந்து போராட்டங்களைக் கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 தலைநகர் நௌமியாவில் பொதுமக்கள் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரநிலை 12 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்க, டிக்டாக் செயலியை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!