பிரபல முதலீட்டு பட்டியலில் இருந்து அதானி நிறுவனம் நீக்கம்
நார்வேயின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில், நார்வேயின் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதிக்கு தகுதியான நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் எல்3 ஹாரிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் சீனாவின் வெய்ச்சாய் பவர் நிறுவனங்களும் கைவிடப்பட்டன.
நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் மற்றும் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, இதை ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம் எனக்கூறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நார்வே நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.