ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் மாயம் : முழுவீச்சில் இடம்பெறும் தேடுதல் பணி!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் பயணித்த வேளையில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரை தேடும் நடவடிக்கையை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால் விமானம் மலைப் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இருக்கும் இடத்திற்கு இதுவரை யாராலும் செல்ல முடியவில்லை, அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈரான் ஆயுதப்படை மற்றும் கமாண்டோ பிரிவுகள் உட்பட 40 குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளன.
ஈரான்-அசர்பைஜானி எல்லையில் உள்ள அணையை திறப்பதற்காக ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் குழு நேற்று விமானம் மூலம் புறப்பட்டிருந்தனர்.
விழா முடிந்து ஈரான் அதிபர் உள்ளிட்டோருடன் சென்ற ஹெலிகாப்டர் திரும்பி வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
ஈரானிய மக்கள் தமது ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.