லண்டனில் குடியிருப்பு தொகுதியில் பாரிய தீவிபத்து!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
லண்டனில் குடியிருப்பு தொகுதியில் பாரிய தீவிபத்து!

மத்திய லண்டனில் குடியிருப்பு தொகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

லண்டனின் ஸ்பிடல்ஃபீல்ட்ஸில் உள்ள 22 மாடி குடியிருப்புத் தொகுதியின் மூன்றாவது மாடியில் இந்த தீவிபத்து பதிவாகியுள்ளது.

சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில், தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒரு பெண் மூச்சுத்திணறல் கருவியை அணிந்த நிலையில், தீயணைப்பு வீரர்களால் ஆம்புலன்ஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4