இத்தாலிக்கு செல்போன்களை கடத்த முயன்ற நபர் சுவிஸில் கைது

#Arrest #Switzerland #Mobile #Smuggling #Zurich
Prasu
2 months ago
இத்தாலிக்கு செல்போன்களை கடத்த முயன்ற நபர் சுவிஸில் கைது

நூற்றுக்கணக்கான செல்போன்களை இத்தாலிக்கு கடத்த முயன்ற நபரை சுவிஸ் பொலிஸார் கைது செய்தனர். 

சுவிட்சர்லாந்தின் நபர் ஒருவர் சூரிச்சில் இருந்து மிலன் நகருக்கு ரயிலில் பயணித்தார். அவர் வைத்திருந்த சூட்கேசில் தனித்தனியாக படலத்தில் சுற்றப்பட்ட நூற்றுக்கணக்கான செல்போன்களை சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அவற்றில் 71 ஐபோன்கள் மற்றும் 29 சாம்சங் சாதனங்கள் அடங்கும். பின்னர் அவர் Chiassoவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர் 40 வயதுடையவர் என்றும், அவர் ருமேனியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. 

சூரிச்சின் Street Parade இசை விழாவின்போது இந்த செல்போன்கள் அனைத்தும் திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. 

மேலும், அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!