A/L பரீட்சையில் தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு : ஆசிரியர்களும் பயன்படுத்த முடியாது!
#SriLanka
Dhushanthini K
2 hours ago
2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளின் போது கண்காணிப்பாளர்கள் மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையளார் அமித் ஜயசுந்தர, உதவி அதிபர்கள் அல்லது ஊழியர்கள் இம்முறை கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைகள் திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
"இந்த ஆண்டு மொத்தம் 333,183 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். மொத்த பரீட்சார்த்திகளில் 253,390 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளனர்" என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.