மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை - ஈரானிய வான்வெளியை புறக்கணிக்கும் விமான நிறுவனங்கள்!
#SriLanka
#Flight
#Iran
Thamilini
1 hour ago
மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பல விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து தங்கள் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி வழியாகப் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தங்கள் விமானங்களை மீண்டும் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு விமானங்களை இயக்கும் FLYDUBAI மற்றும் ETIHARD ஆகியவை வழக்கமான அட்டவணையின்படி தங்கள் சேவைகளை முன்னெடுக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.