மட்டக்களப்பு நோக்கி நகரும் தாழ்வு மையம் : மக்களுக்கு எச்சரிக்கை!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு இன்று காலை மட்டக்களப்புக்கு நகரும் எனவும், தென்கிழக்கில் சுமார் 500 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகுறது.
இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகங்களுடன் கனமாக இருக்கலாம்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.