இந்த வருடத்திற்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
#SriLanka
#Test
#Examination
Dhushanthini K
2 hours ago
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை இன்று (25.11) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சார்த்தியின் கையொப்பத்தை தகுதியான ஒருவரால் சரிபார்க்க வேண்டியது அவசியமானது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.