இலங்கையின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #Rain
Dhushanthini K
2 hours ago
இலங்கையின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

இலங்கையில் பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (26) காலை 04.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும்.

அதன்படி, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 4.15 மணி வரையான காலப்பகுதியில் அம்பாறை, லாகுகல பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன்,    191 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அம்பாறை மஹாஓயா பிரதேசத்தில் 149.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தமன பிரதேசத்தில் இருந்து 147 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!