அனர்த்தங்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க கால்நடை சுகாதார திணைக்களத்தின் அறிவிப்பு!
அடுத்து வரும் இரண்டு மூன்று தினங்கள் (நவம்பர் 26-28 தினங்கள்) வடக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் 350 மில்லி வரையான கடும் மழையுடன் கூடிய காற்று வீசுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்ற நிலையில் சூழல் வெப்ப நிலையும் 20 டிகிரி செல்சியஸ் வரை குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
இத்தகைய காலநிலை மாற்றங்களினால் திறந்த வெளிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் கோழிகள் பாரிய அளவில் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமுண்டு எனவே கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பாதகாப்பதற்காக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசரமும் அவசியமுமானதாகும்.
1. குளிர் காற்று, கடும் மழை வெள்ளம் போன்றவற்றில் இருந்து தமது கால்நடைகளை பாதகாப்பதற்காக கொட்டகைகள் மற்றும் மேட்டு நிலங்களில் கால்நடைகளை பாதுகாப்பாக அடைத்து வைத்தல்.
2. குளிரில் பாதிப்புறும் கால்நடைகளை பாதுகாப்பாக வெப்பமூட்டப்பட்ட சூழலில் உடல் வெப்பத்தை பாதுகாக்கும் வண்ணம் பராமரித்தல்.
3. நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உடன் சிகிச்சை பெறும் பொருட்டு அருகிலுள்ள கால்நடை மருத்துவரை உதவிக்கு அழைக்கவும்.
4. போதிய கால்நடை தீவனங்களை கையிருப்பில் வைத்திருத்தல் அவசியம்.
5. கால்நடைகள் இறப்பு ஏற்படின் பண்ணைப்பதிவு இலக்கம் மற்றும் காது இலக்கம் என்பவற்றுடன் இறப்பை உறுதிசெய்யும் வகையிலான புகைப்படங்களுடன் கால்நடை மருத்துவ பணிமனைக்கு தகவலை வழங்குதல் ஆகியவை அவசியம் அவசர தொலைபேசி இலக்கங்கள்..
யாழ் மாவட்டம்- 0773638953
கிளிநொச்சி- 0777799066
முல்லைத்தீவு - 0770755225
வவுனியா - 0774457417
மன்னார்- 0777853124
மாகாணப்பணிப்பாளர்
கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்
வடக்கு மாகாணம்