வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை தாமதமாகும்!
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு ஊழியர்களால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், நான்காவது கடன் தவணை பெறுவது 2025 இல் வரவு செலவுத் திட்ட ஆவணத்தை சமர்ப்பிக்கும் வரை தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன் படி அடுத்த கடன் தவணை பெறுவது அடுத்த ஆண்டு மார்ச் வரை இன்னும் சில மாதங்கள் தாமதமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை மற்றும் செயற்குழுவின் அனுமதி அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுவதே இதற்குக் காரணம்.
அத்துடன் அந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்நிபந்தனைகளை நிறைவேற்றுவது அவசியமானதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நோக்கங்களுக்கு அமைவாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பது உள்ளிட்ட முன் நடவடிக்கைகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும்.