73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை தாண்டியுள்ளதாக அறிவிப்பு!
கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 65 வீதத்தை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, அநுராதபுரம், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இதுவரை 50 வீதத்தை தாண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டை, காலி, கண்டி, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 80% க்கும் அதிகமான நீர் கொள்ளளவு பதிவாகியுள்ளது. அதேபோல்பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் நீர் கொள்ளளவு 70% ஆகவும், திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களின் நீர் கொள்ளளவு 45% ஆகவும் உள்ளது.