2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரைக்கும் அரச பணிகளையும் மற்றும் அரச கடன் சேவைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்காக "நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணத்தை” (Vote on Account) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் தொடர்ந்து வரும் காலத்தில் ஒருசில அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளல் மற்றும் கணக்கீடு செய்வதற்குத் தேவையான நிதியோதுக்கீட்டை ஏற்பாடு செய்வதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் (Supplementary Estimates) சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.