சூறாவளியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு நிலை!
நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கி.மீ தொலைவில் நிலைகொண்டது.
இது இன்று (27) மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக வலுவடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு நோக்கி நகர்கிறது.
இந்த அமைப்பின் தாக்கத்தினால், தீவின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழையும் பலத்த காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.