இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை!

#SriLanka
Mayoorikka
2 hours ago
இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவ புதன்கிழமை (27) தெரிவித்தார்.

 மேலும், சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இதன்படி, கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கங்கபட கோரலய, உடுதும்பர, யட்டிநுவர, பாத ஹேவாஹட, தெல்தோட்டை, பாததும்பர, வில்கமுவ, அம்பகமுவ, அம்பகமுவ கோறளை, இரத்தோட்டை, நாவுல, உள்ளிட்ட பகுதிகளுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அந்தப் பிரதேச மக்கள் விரைவில் அந்த இடங்களை விட்டு வெளியேறுவது முக்கியம் எனவும், அவர்களை வெளியேற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ், இராணுவம் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!