முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது!
#SriLanka
#President
Dhushanthini K
3 hours ago
முன்னாள் ஜனாதிபதிகளுக்க வழங்கப்பட்ட ஆயுத படைகளின் பாதுகாப்பு இன்று (23.12) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படவுள்ளன.
கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது இது தொடர்பான அறிவிப்பை ஆனந்த விஜெபாலா வெளியிட்டிருந்தார்.
அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணியாற்றுவார்கள். பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.