பெண்ணொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய இருவர் கைது!

#SriLanka #Arrest
Dhushanthini K
4 hours ago
பெண்ணொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய இருவர் கைது!

தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய இரு சந்தேக நபர்களை மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 கடந்த 4ஆம் திகதி களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வியாபாரி ஒருவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.

 இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

 இதன்படி, இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று (22) காலை கிரிபத்கொட, டலுகம பிரதேசத்திலும், பேலியகொட, பட்டிய சந்தி பிரதேசத்திலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 53 வயதுடைய களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள். 

 மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!