போக்குவரத்து பொலிஸாரின் உடைகளில் கமராக்களை பொறுத்த நடவடிக்கை!

#SriLanka #Police
Dhushanthini K
4 hours ago
போக்குவரத்து பொலிஸாரின் உடைகளில் கமராக்களை பொறுத்த நடவடிக்கை!

போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அடுத்த வருடம் முதல் வீதிப் பணியில் ஈடுபடும் போது அணிவதற்கு பாதுகாப்பு கமராக்களை (Body Worn cameras) வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்துகிறது.

முதற்கட்டமாக இவ்வாறான 1500 கமராக்கள் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.ரன்மல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இந்த கேமராக்கள் எடுக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்படுவதால், மக்கள் மற்றும் காவல்துறையினரின் நடத்தைகளை கண்காணிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுயமரியாதை மற்றும் நிபுணத்துவத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!