மின்சார கட்டண திருத்தம் - பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!

#SriLanka #Electricity Bill #sri lanka tamil news
Dhushanthini K
4 hours ago
மின்சார கட்டண திருத்தம் - பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இந்த அமர்வுகளில் மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு மற்றும் கட்டண திருத்தம் குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சமர்ப்பித்த எதிர் முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன. 

 எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படக் கூடாது என இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தது. 

 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, எதிர் பிரேரணைகளை முன்வைக்கும் போது, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. 

 இந்த முன்மொழிவுகள் தொடர்பில் எழுத்துமூலம் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானதுடன், வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!