தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு : மக்கள் அச்சப்பட தேவையில்லை!
கிறிஸ்த்தவ பக்தர்கள் மற்றும் மக்கள் எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் ஈடுபடுமாறு கொழும்பு உயர்மறைமாவட்ட மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய ஜூட் கிரிஷாந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்தந்த மத ஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய ஜூட் கிரிஷாந்த இதனை விளக்கினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “முழு இலங்கை மக்களும் நத்தார் பண்டிகைக்கு தயாராகி வரும் வேளையில், குறிப்பாக கிறிஸ்தவ பக்தர்கள் இன்று நள்ளிரவு இறை ஆராதனையில் பங்கேற்பார்கள்.
குறிப்பாக எமது மக்கள் கூடும் தேவாலயங்களில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து விசேட பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர்.
அச்சமின்றி தேவாலயங்களுக்குச் சென்று மத வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.