பயிர் சேதம் : ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

#SriLanka
Dhushanthini K
12 hours ago
பயிர் சேதம் : ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் உள்ளிட்ட6 பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் கடந்த மோசமான காலநிலையினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விவசாய, காணி, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

 வேளாண் வளர்ச்சித் துறையின் புள்ளி விவரப்படி டிசம்பர் 2ஆம் திகதி நிலவரப்படி 91,300 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 86,225 ஏக்கர் நெற்பயிர்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

மேலும் அந்த பகுதிகளில் உள்ள 173 பாசனக் கால்வாய்கள் முழுமையாக சேதமடைந்து 1148 ஏக்கர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!