பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் இணைய மோசடி : மக்களின் கவனத்திற்கு!
#SriLanka
#Fraud
Dhushanthini K
12 hours ago
பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து சில பரிசுகளை பெற்றுள்ளதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளதாக மன்றத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.